UPDATED : நவ 03, 2026 04:21 AM
ADDED : நவ 02, 2026 07:17 PM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: ''மன்னாடிமங்கலத்தில் உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்'' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சித்தாதிபுரத்திலிருந்து திருநகருக்கு தரையில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. பத்து நாட்களாக மந்தை ரேஷன் கடை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
தண்ணீர் தேங்குவதால் ரோடு சேதமடைந்து, சேறும் சகதியுமாக மாறியுள்ளது. வாகனங்கள் செல்ல வழியின்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதால் மக்கள் வருந்துகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
