/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்: உதயகுமார்
/
அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்: உதயகுமார்
அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்: உதயகுமார்
அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்: உதயகுமார்
ADDED : அக் 17, 2024 05:44 AM
மதுரை: ''தி.மு.க., அரசு நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்'' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் 15 சென்டிமீட்டருக்கு மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியவில்லை. மழை நீரை வெளியேற்ற தயாராக இருக்க வேண்டும். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் எதற்கும் தயாராக இல்லை. திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., ஆய்வு அறிக்கை என்ன ஆனது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று பழனிசாமி கூறுகிறார். முதல்வர் வாய் திறக்கவில்லை. அறிக்கை செயல்பாடு குறித்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் தான் விவரம் தெரியும். அரசு நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டார்கள்.
பொதுவாக இதுபோன்ற பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும் முன், வெள்ளம் இருக்கும் போது, வெள்ளம் வடிந்த பின்பு என்று மூன்று கட்டங்களாக நாங்கள் பிரிப்போம். இந்த அணுகுமுறையை அரசு கையாள வில்லையா என கேள்வி எழுகிறது. கனமழையில் எத்தனை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்ற புள்ளி விவரம் வெளியிடவில்லை. சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், திருமண மண்டபங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். எத்தனை தயார் நிலையில் உள்ளன என்று தெரியவில்லை.
தமிழக அரசை பாராட்டிய விதத்தில் ஆளுநர் எந்த செயல்பாட்டை பாராட்டினார் என்று கூறவில்லை. பாராட்டு என்றுக்கூறி ஒரு மெத்தனபோக்கை உருவாக்கக்கூடாது.
இவ்வாறு கூறினார்.

