/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரிகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
/
குவாரிகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 02, 2025 06:27 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கல்லணையில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன.
சில மாதங்களாக அனுமதியின்றி அதிகளவில் பள்ளம் தோண்டுவதோடு, வெடிகளை வைத்து தகர்த்து கற்களை வெட்டி எடுப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, குவாரி துாசுகளால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் விவசாயம் முற்றிலும் பாதித்துள்ளது. குவாரிகளின் அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கல்லணை, கல்லணை புதுார், தும்பக்குளம், அச்சங்குளம், உலகாணி, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

