/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வை மக்கள் கைவிடமாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை

ADDED : செப் 20, 2024 05:41 AM
திருமங்கலம் : 'அ.தி.மு.க., மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி. அதனை மக்கள் கைவிடமாட்டார்கள்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கள்ளிக்குடி ஒன்றியம் வலையங்குளம், சின்ன உலகாணி பகுதியில் புதிய கட்டடங்கள், நிழற்குடைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் கேள்விக்குறியாக உள்ளது. உரிய நிதி ஒதுக்காததால் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
நாட்டில் யார் துணை முதலமைச்சராக வருவது என்ற கொதிகலன் விவாதம் நடக்கிறது.
75 ஆண்டு கால தி.மு.க., வரலாற்றில் 25 ஆண்டுகள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். அண்ணா உருவாக்கிய ஆட்சியைத் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் அ.தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் கிடைத்த ஆட்சிதான். மக்கள் விரும்பியதால் தி.மு.க., ஆட்சிக்கு வரவில்லை. அ.தி.மு.க.,வின் 52 ஆண்டு கால வரலாற்றில் 32 காலம் ஆட்சியில் இருந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அ.தி.மு.க.,வை மக்கள் கைவிடமாட்டார்கள்.
அண்ணாவின் கொள்கைகளை தி.மு.க., குழிதோண்டி புதைத்து வருகிறது. அண்ணா வாரிசு கொள்கையை எதிர்த்தார். தி.மு.க., அதை முழுமையாக செயல்படுத்தி வருகிறது என்றார்.