/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சிகளில் வரி செலுத்த முடியாமல் மக்கள் தவிப்பு சர்வர் பிரச்னை காரணமாம்

ADDED : ஜூன் 12, 2025 02:18 AM
பேரையூர்: ஊராட்சிகளில் கடந்த 15 நாட்களாக 'சர்வர்' பிரச்னையால் வரி செலுத்த முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.
தமிழக முழுவதும் ஊராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி, உரிமை கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக, அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தும் திட்டம் கடந்தாண்டு அறிமுகமானது.
திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின் அடிக்கடி'சர்வர்' முடங்கி விடுகிறது. இதனால் பல நாட்கள் வரி வசூல் செய்ய முடியாமல் ஊராட்சி செயலர்கள் சிரமத்தில் உள்ளனர். தற்போதும் தொடர்ந்து நிலவும் சர்வர் பிரச்னையால் வரிகளை செலுத்த ஊராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்தப் பிரச்னையால் வீடு வாங்குவோர் தங்கள் பெயருக்கு வீட்டை மாற்றம் செய்ய முடிவதில்லை. பலர் சொத்து வாங்கியும் குறிப்பிட்ட வீடு அல்லது விவசாய பூமியை தங்கள் பெயருக்கு மாற்ற முடியாமல் திணறுகின்றனர். வெளியே கடன் வாங்கி, வீடு வாங்கியவர்கள் பின் வீட்டை வங்கியில் அடமான வைத்து வெளியே கடனை செலுத்த முடியாமல் பிரச்னையில் சிக்கியுள்ளனர். வரி செலுத்தும் இணையதளத்தை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.