/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிக்கு சமையலறை கழிப்பறை கேட்டு மனு
/
பள்ளிக்கு சமையலறை கழிப்பறை கேட்டு மனு
ADDED : ஜூன் 17, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், சமூகநல பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கார்த்திகாயினி, நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கி.புதுமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் கனிமொழி, துணைத் தலைவர் விஜயபாரதி உட்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், ''1966 முதல் இயங்கி வரும் பள்ளியின் கட்டடத்தை கடந்தாண்டு இடித்து புதிதாக கட்டினர்.
இதில் சமையலறை, கழிப்பறைகளை இடித்துவிட்டனர். தற்போது அவை இரண்டும் இல்லாமல் பள்ளி இயங்கி வருகிறது. உடனே அவற்றை கட்டித்தர வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.