ADDED : செப் 19, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: கர்நாடகாவை சேர்ந்தவர் அருண்குமார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் இரவு துாங்கினார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விழித்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள அவரது அலைபேசி திருடு போனது தெரிந்தது. ரயில்வே போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் சோதனையிட்டனர். பார்சல் அலுவலகம் அருகே பதுங்கி இருந்த திருநெல்வேலி பண்டாரபாண்டியனை 36, கைது செய்தனர். அவரிடம் இருந்து அலைபேசியை மீட்டனர். அவர் மீது கங்கைகொண்டான் போலீசில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.
