ADDED : ஆக 27, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை பாத்திமா கல்லுாரியில் இயற்பியல் முதுகலை, ஆராய்ச்சித் துறை சார்பில் துறைத் தலைவர் லீனா சந்திரா தலைமையில் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
'எரிபொருள் மின்கல தொழில்நுட்பம் - ஒரு மின்வேதியியல் அற்புதம்' எனும் தலைப்பில் சென்னை ஏ.ஆர்.சி.ஐ., எரிபொருள் மின்கல தொழில்நுட்ப மைய விஞ்ஞானி ராமன் வேதராஜன் பேசினார். ஆராய்ச்சி ஒத்துழைப்பு, கல்வி பரிமாற்றத்தை வலுப்படுத்தும் விதமாக கோவை மெட்டீரியல்ஸ் ஆராய்ச்சி மையம், கல்லுாரி இயற்பியல் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மைய இயக்குநர் செல்வ சேகர பாண்டியன் பேசினார்.
துறைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர்., நெட், செட் பயிற்சி காணொலிகளை கொண்ட 'கூகுள்' வகுப்பறை துவக்கப்பட்டது.