நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சமயநல்லுார் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் செங்குளம் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பாதை மறைக்கப்பட்டு தாங்கள் செல்ல வழி இருக்காது, தங்களுக்கு பாதை ஒதுக்கீடு செய்து விட்டு சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் எனக்கூறி நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட பெண்கள் 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

