/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பன்றிகள் வளர்க்கிறாங்க... மக்கள் அவதிப்படுறாங்க...
/
பன்றிகள் வளர்க்கிறாங்க... மக்கள் அவதிப்படுறாங்க...
பன்றிகள் வளர்க்கிறாங்க... மக்கள் அவதிப்படுறாங்க...
பன்றிகள் வளர்க்கிறாங்க... மக்கள் அவதிப்படுறாங்க...
ADDED : நவ 07, 2024 02:35 AM
மேலுார்: மேலுார் நகராட்சி 8வது வார்டில் வளர்க்கப்படும் பன்றிகளால் மக்கள் பலவித தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த வார்டிற்குட்பட்ட காந்திஜி பூங்கா ரோட்டில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில் பின் பகுதியில் சிலர் நுாற்றுக்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்க்கின்றனர். பன்றிகளின் கழிவுகள் மற்றும் கழிவு நீர் தேங்குவதால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: 3 பன்றிகள் இறந்ததால் துர்நாற்றத்துடன் சுகாதார கேடு ஏற்பட்டு குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பன்றிகள் வீடுகளுக்குள் வருவதால் கதவை அடைத்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி அதிகாரி தினேஷ்குமார் கூறுகையில், ''பன்றி வளர்ப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தடுக்கப்படும்'' என்றார்.