ADDED : ஜன 02, 2026 06:07 AM
மதுரை: மதுரை வனக்கோட்டம் சார்பில், தமிழக அரசின் 'கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பசுமை வளத்தை வலுப்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாநிலத்தின் பசுமை வளத்தை வலுப்படுத்துவதில் தனியார் தொழில்துறைகள், குடிமக்கள் அமைப்புகள், அரசுக்கு இடையிலான கூட்டாண்மையை வெளிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். 38 மாவட்டங்களில் மொத்தம் 2 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிச. 19ல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் ஆகியோர் 5 மரக்கன்றுகள் நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மதுரை வனச் சரக அலுவலர் சிக்கந்தர் பாட்சா, வனத்துறை களப்பணியாளர்கள், கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் பிரதிநிதிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

