ADDED : ஜூலை 16, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கொசவபட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதி லோக செல்வம் கூறுகையில், ''இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இதுவரை எந்த அரசும் முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவில்லை. இதனால் வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கியும், தெருக்களில் செல்லும் நிலையும் உள்ளது. தெருமுழுவதும் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று ஏற்பாடும் அபாயம் உள்ளது. தேங்கும் கழிவு நீரால் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.