ADDED : செப் 29, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில், 'தமிழில் பிற மொழி கலப்பு' குறித்து சிந்தனைக் கவியரங்கம், கவிஞர் ரவி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன் வரவேற்றார். கவிஞர்கள் கல்யாணசுந்தரம், குறளடியான், பால் பேரின்பநாதன் உட்பட பலர் கவிதை பாடினர். கவிஞர்கள் மகா முகுபாரதி, காயத்ரிக்கு பரிசு வழங்கப்பட்டது. துணைச் செயலர் கங்காதரன் நன்றி கூறினார்.
மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் ஜேம்ஸ், உலகத் தமிழாராய்ச்சி சங்கத் தலைவர் ராம பாண்டியன், கரூரில் த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தோருக்கும் மவுன அஞ்சலி செலுத்தினர். பொருளாளர் கல்யாணசுந்தரம், நிர்வாகி ஆதி சிவ தென்னவன் ஏற்பாடு செய்தனர்.