நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மாமதுரைக் கவிஞர் பேரவை- சார்பில் பாரதியின் ஆத்திசூடி என்ற தலைப்பில் சிந்தனை கவியரங்கம் மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
தலைவர் பேராசிரியர் சி.சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா. வரதராஜன் முன்னிலை வகித்தனர்.
வரதராஜன் எழுதிய 'தமிழ் மண்ணில் தவ யோகிகள்' கவிதை நுால் வெளியிடப்பட்டது. கங்காதரன், முருகு பாரதி, குறளடியான், அழகையா, ஆறுமுகம், லிங்கம்மாள், முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், பழனி, பால் பேரின்பநாதன், ஸ்ரீ வித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினர். பார்வையாளராக விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் பங்கேற்றார்.