நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் உயரத் தமிழன் உயர்வான்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் ரா.ரவி வரவேற்றார். பொருளாளர் ரா. கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் ரா. வரதராஜன், துணைச்செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்து கவிதை வாசித்தனர். கவிஞர்கள் வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, சமயக்கண்ணு, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், முருகபாரதி, அனுராதா, நாகவள்ளி ஆகியோரும் கவிதை வாசித்தனர். புரட்சிக்கவிஞர் மன்றத்தலைவர் வரதராஜன் பரிசு வழங்கினார். ஆதிசிவம் தென்னவன் நன்றி கூறினார்.

