ADDED : பிப் 20, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அவனியாபுரம் அய்யனார் 54. கூலித் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தார். திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி முத்துக்குமாரவேல்: அய்யனாருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

