ADDED : பிப் 01, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீசாரின் டூவீலர் ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது: இந்தாண்டில் நகரில் சாலை விபத்து, உயிரிழப்பை தடுக்க விபத்து, உயிரிழப்பு ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். தெருவிளக்கு, தடுப்பு அல்லது பிற காரணங்களால் விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட துறையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.
துணைகமிஷனர் குமார், கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார், மதுரை மத்தி ஆர்.டி.ஓ., சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.