/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநாட்டில் 'அரசியல்' பேச விஜய்க்கு தடை 27 நிபந்தனைகளை விதித்தது போலீஸ்
/
மாநாட்டில் 'அரசியல்' பேச விஜய்க்கு தடை 27 நிபந்தனைகளை விதித்தது போலீஸ்
மாநாட்டில் 'அரசியல்' பேச விஜய்க்கு தடை 27 நிபந்தனைகளை விதித்தது போலீஸ்
மாநாட்டில் 'அரசியல்' பேச விஜய்க்கு தடை 27 நிபந்தனைகளை விதித்தது போலீஸ்
ADDED : ஆக 13, 2025 06:32 AM
மதுரை:மதுரையில் ஆக.,21 ல் நடக்கும் த.வெ.க., 2வது மாநில மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது உட்பட 27 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தி.மு.க., அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என மறைமுகமாக போலீசார் தடைவிதித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தென்மாவட்டங்களை குறிவைத்து மதுரை பாரப்பத்தியில் ஆக.,21 ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இரவு, பகலாக நடந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் போலீசார் 27 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.
விஜய்க்கு தடுப்புச்சுவர் நிபந்தனைகள் விவரம்: மாநாட்டிற்கு வருபவர்கள் மதியம் 3:00 மணிக்குள் திடலுக்கு வர வேண்டும். யார் தலைமையில் வருகிறார்கள் என்ற விபரத்தை போலீசிற்கு தெரிவிக்க வேண்டும்.
மாநாடு வளாகத்தில் பாதைகள் மேடு, பள்ளமாக இருக்காத வகையில் சமமாக இருக்க வேண்டும். பார்க்கிங் இடத்திற்கும், மாநாட்டு மேடை இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும். முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். விஜய் வந்து செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
கொடி, அலங்கார வளைவு, பேனர், பட்டாசுகள் போன்றவையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தளவு அதை தவிர்க்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடப்பதால், பாதுகாப்பு கருதி தடுப்பு அமைக்க வேண்டும். மக்கள் வெளியேற தனித்தனி அவசர வழிகள் ஏற்படுத்த வேண்டும். மாநாட்டிற்கு வரும் போதும், செல்லும் போதும் ஊர்வலமாக செல்லக்கூடாது.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது. நெடுஞ்சாலையிலும், அதன் இருபுறமும் பேனர், அலங்கார வளைவுகள், கொடி கம்பிகளை பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும். மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. ஜாதி, மத மோதலை துாண்டும் விதமாக பேசக்கூடாது உட்பட 27 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
பேச்சில் அனல் தெறி'க்குமா மாநாட்டிற்கு த.வெ.க., சார்பில் போலீசில் அனுமதி கேட்டபோது 'மேடையில் விஜய் மட்டுமே பேசுவார்' என தெரிவிக்கப்பட்டது. இச்சூழலில் போலீசார் 26வது நிபந்தனையாக 'சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது' என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாடு, பனையூர் பூத் கமிட்டி கூட்டம், சென்னை பரந்துார் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் தி.மு.க., அரசை விஜய் கடுமையான விமர்சித்தார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதற்கு கட்டுப்பாடு விதிக்கவே போலீசார் இதுபோன்ற நிபந்தனையை விதித்துள்ளனர் என்கின்றனர் த.வெ.க.,வினர்.
அவர்கள் கூறுகையில், 'தி.மு.க., அரசுக்கு எதிராக மதுரையில் விஜய் பேசும் பேச்சு 'மாஸ்' ஆக இருக்கும். அதற்கு போலீஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்தால் அதை சட்டப்படி எதிர்க்கொள்வோம்' என்றனர்.
போலீஸ் தரப்பில் கேட்ட போது,'இது வழக்கமான நிபந்தனைகள்தான். விஜய்க்காக மட்டும் விதித்தது கிடையாது. அவர் என்ன பேசுகிறார் என்பதை பொறுத்தே எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்' என்றனர்.

