
200 கிலோ கூல் லிப் பறிமுதல்
மதுரை: புதுார் சிப்காட் பகுதியில் டூவீலரில் மூடைகளுடன் வந்த தெப்பக்குளம் ராஜபாண்டியன் 43, எஸ்.ஆலங்குளம் பாண்டியராஜனை 28, போலீசார் விசாரித்தபோது மளிகை பொருட்கள் என்றனர். சோதனை செய்தபோது அதனுள் 200 கிலோ கூல்லிப், கணேஷ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. சில்லரை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். ராஜபாண்டி மீது ஏற்கனவே இதுதொடர்பாக வழக்குகள் உள்ளன.
4 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
திருமங்கலம்: மதுவிலக்கு போலீசார் மதுரை - தேனி ரோட்டில் கருமாத்துார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த கீழப்பெருமாள்பட்டி பிரசாந்த் 28, எஸ்.கிருஷ்ணாபுரம் அஜித்தை 22, சோதனையிட்டபோது அதில் தலா 2 கிலோ கஞ்சா இருந்தது. அவர்களை கைது செய்தனர்.
டூவீலர் திருடர்கள் கைது
மதுரை: அரசு மருத்துவமனை, தமுக்கம் உட்பட பல்வேறு இடங்களில் டூவீலர்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக செல்லுார் குமார் 36, நாகமலை புதுக்கோட்டை பிரபு 41, ஆகியோரை போலீசார் கைது செய்து 21 டூவீலர்களை மீட்டனர். இவர்கள் மதுரை தவிர வெளியூர்களில் நடக்கும் திருவிழா, சந்தைகளிலும் டூவீலர்களை திருடி வந்துள்ளனர்.
திருடியவர் கைது
மேலுார்: தனியாமங்கலம் பரமேஸ்வரன் 63. தச்சு கூடம், பலசரக்கு கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் மரவேலை செய்வதற்காக வெளியே சென்றவர் திரும்பி வந்த போது இயந்திரங்கள், பொருட்கள் திருடப்பட்டிருந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு வடக்கு நாவினிபட்டி கார்த்திக்கை 29, கீழவளவு எஸ்.ஐ., பிரகாஷ் கைது செய்தார்.

