32 பவுன் கொள்ளை
திருமங்கலம்: நடுக்கோட்டை மீனாட்சி நகர் சீனிவாசன் 70, பேபி கமலம் 67. இவர்களுக்கு நான்கு மகன், ஒரு மகள் உள்ளனர். சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மற்றவர்கள் கூட்டுக் குடும்பமாக நடுக்கோட்டையில் வசிக்கின்றனர். லாரிகள் வைத்து தொழில் செய்கின்றனர். டிச., 25ல் அனைவரும் பழநிக்கு பாதயாத்திரை சென்று விட்டு, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர். வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த 6 பீரோக்களும் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 32 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பால் கொட்டி சிறுவன் காயம்
திருமங்கலம்: சங்கர் நகரை சேர்ந்த வரதராஜன் மகன் நாகதுர்கேஷ் 7. தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு சிறுவனின் அம்மா பால் காய்ச்சி எடுத்து வந்த போது, சிறுவன் எதிர்பாராத விதமாக பாலை தட்டி விட்டுள்ளார். இதில் பால் சிறுவன் மீது கொட்டியதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே கரையான்பட்டி ஆட்டோ டிரைவர் முருகன் 38. பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு உறவினர் மகளான மேகவர்ஷினியை திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விரக்தியில் இருந்த சிவக்குமார், நேற்று தனது தோட்டத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.