
தம்பி கொலை; அண்ணன் கைது
மேலுார்: முத்துவேல் பட்டியைச் சேர்ந்தவர் புனிதா 60, இவருக்கு 2 பெண்கள், 4 மகன்கள் என ஆறுபேர் உள்ளனர். மூவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத மூன்று மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி அளவில் அரவிந்த் 27, அவரது தாயை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் ராஜா 29, கட்டையால் தாக்கியதில் அரவிந்த் இறந்தார். ராஜா மேலுார் போலீசில் சரணடைந்தார். இறந்த அரவிந்த் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ் குமார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் ------------------------------------------அடித்துக்கொலை
திருமங்கலம்: ராயபாளையத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கோவிந்தராஜ் 29, பொள்ளாச்சியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று மாலை எம்.ஜி.ஆர்., ஊரணி பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் அவரது தலையில் மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானார். மது அருந்திய நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். இறந்தவர் உடலை திருமங்கலம் தாலுகா போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
------கஞ்சாவுடன் கைது
சோழவந்தான்: பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கஞ்சாவுடன் நின்றிருந்த மதுரை காமராஜர் சாலை சக்திவேலை 45, கைது செய்தனர். விற்பனைக்கு கொண்டுவந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

