நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் மீது கல் வீசியவர் கைது
திருமங்கலம்: அத்திப்பட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ் சென்றது. ராஜபாளையம் ரோட்டில் தங்கள் வாகனம் மீது உரசியதாக கூறி டூவீலரில் வந்த இருவர் ஆலம்பட்டி சேடப்பட்டி விலக்கருகே பஸ்சை வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். அதில் ஒருவர் பயணிகளையும் மிரட்டியுள்ளார். பஸ் மீது கற்களை வீசினர். இதுதொடர்பாக ஆலம்பட்டி கட்டடத் தொழிலாளி சக்திவேலை 28, போலீசார் கைது செய்தனர்.
புகையிலை -----------------------------விற்றவர்கள் கைது
கொட்டாம்பட்டி: எஸ்.ஐ., கவிதா, போலீசார் தெய்வேந்திரன் வெள்ளினிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் புகையிலை விற்ற முத்துசாமி 30, பள்ளபட்டி நாகராஜன் 43, பொட்டப்பட்டி கார்த்திக் 27, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 224 கிலோ புகையிலை மற்றும் ரூ.5 ஆயிரத்து 860 ஐ பறிமுதல் செய்தனர்.---