நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
15 பவுன் நகை ஒப்படைப்பு
மதுரை: பீ.பி.குளம் கோபாலகிருஷ்ணன். நேற்று (ஜூலை 14) தேஜஸ் ரயிலில் குடும்பத்துடன் மதுரை வந்தவர் பையை தவறவிட்டார். புகாரின் பேரில் ரயில்வே போலீசார் பையை மீட்டனர். அதிலிருந்த 15 பவுன் நகை அடையாளம் காணப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி
திருமங்கலம்: காங்கேயநத்தம் கொத்தனார் விஜயகுமார் 32. மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வசித்தார். நேற்றுமுன்தினம் மாலை காங்கேயநத்தத்தில் உள்ள உறவினர்களை பார்க்க டூவீலரில் சென்றார். பன்னீர்குண்டு அருகே எதிர் திசையில் அருப்புக்கோட்டை செந்தில்குமார்ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் விஜயகுமார் இறந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.