
துாய்மை பணியாளருக்கு குத்து
மதுரை: பைகாரா முத்துராமலிங்கபுரம் கோடீஸ்வரன் 43. மாநகராட்சி குப்பை வண்டியின் ஒப்பந்த டிரைவர். இவருடன் பணியாற்றுபவர் கரும்பாலை பட்டாள் 38. இருவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில் கோச்சடை அருகே வழிமறித்து கத்தியால் பட்டாள் குத்தினார். தடுத்ததில் கோடீஸ்வரனுக்கு வலது கை, கழுத்தில் காயம் ஏற்பட்டது. பட்டாளை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
போக்சோவில் கைது
மதுரை: எல்லீஸ்நகர் ஹரிகிருஷ்ணன் 51. கட்டட தொழிலாளி. அப்பகுதி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இவரை அனைத்து தெற்கு மகளிர் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன் இதே சிறுமிக்கு ஹரிகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் வெட்டு
உசிலம்பட்டி: பூதிப்புரம் ராமகிருஷ்ணன் 38. பந்தல் தொழிலாளியான இவர், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்கச் சென்றார். இரவு மது போதையில் மருத்துவமனை வளாகத்திலேயே படுத்திருந்தார். அதிகாலை 1:00 மணிக்கு மருத்துவமனை முன்பு மது போதையில் தகாத வார்த்தையால் ஆட்டோ டிரைவர் மகாராஜனை திட்டிவிட்டு மீண்டும் துாங்கினார். ஆத்திரமுற்ற மகாராஜன் ஆட்டோவில் இருந்த அரிவாளால் ராமகிருஷ்ணனின் கையை வெட்டிவிட்டு தப்பினார். போலீசார் தேடுகின்றனர்.
கொலை செய்த உடலுடன் துாங்கியவர்கள் கைது
பேரையூர்: கள்ளிக்குடி தாலுகா வில்லுார் மாரியப்பன் மகன் சிவா 27. கூலித் தொழிலாளி. மலைச்சாமி மகன் அழகுமலைகண்ணன் 27, சீனிவாசன் மகன் செல்லப்பாண்டி 40. கொத்தனார். நேற்று முன் தினம் இரவு செல்லப்பாண்டி வீட்டில் மது அருந்தினர். அப்போது செல்லப்பாண்டி சட்டை பையில் இருந்த அலைபேசி, பணத்தை சிவா எடுத்துக் கொண்டதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. சிவாவை செல்லப்பாண்டி கம்பியாலும் அழகுமலை பாண்டியன் காலாலும் தாக்கினர். இதில் சிவா இறந்தார். நேற்று காலை வரை பிணத்துடன் வீட்டுக்குள் செல்லப்பாண்டியும் அழகுமலை கண்ணனும் மது போதையில் துாங்கினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் திருடியவர் கைது
மதுரை: செல்லுார் மீனாட்சிபுரம் தினகரன் 52. இவர் அரசு மருத்துவமனை ஆர்த்தோ வார்டில் நோயாளி ஒருவரின் தலையணை அடியில் இருந்து அலைபேசியை திருடியபோது பிடிபட்டார். இவரை போலீசார் கைது செய்தனர்.