/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
/
தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீசார்
ADDED : மார் 20, 2025 05:47 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நுழைவு பகுதியில் உள்ள பாலத்தின் மையப்பகுதி
ஒருபுற கைப்பிடி சுவற்றின் மீது நேற்று மாலை ஹெல்மெட் அணிந்து ஒருவர் அமர்ந்திருந்தார்.போலீசார் பேசியபோது அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். பக்குவமாக பேசி போலீசார் அவரை காப்பாற்றினர். இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் விசாரணையில்
அந்தநபர் நிலையூரைச் சேர்ந்த குட்டிகமல் 27, என்பதும் பெங்களூருவில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்ப்பதும், தனியார் வங்கியில் ரூ. 70 ஆயிரம் கடன் வாங்கியதும், மூன்று தவணைகள் மட்டும் கட்டியதும் தெரிந்தது. கடன் தொகையை நிறுவனத்தினர் செலுத்துமாறு கூறியதாகவும் அதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.