/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுலா தலமாகும் பாசனக் கால்வாய் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
/
சுற்றுலா தலமாகும் பாசனக் கால்வாய் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
சுற்றுலா தலமாகும் பாசனக் கால்வாய் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
சுற்றுலா தலமாகும் பாசனக் கால்வாய் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூலை 14, 2025 02:26 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் - ஊர்மெச்சிக்குளம் ரோட்டில் வைகை பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் சுற்றுலா தலம்போல கூட்டம் கூடுவதால் போலீஸ் பாதுகாப்பும் அவசியம் தேவைப்படுகிறது.
அலங்காநல்லுாரில் இருந்து ஊர்மெச்சிகுளம் செல்லும் ரோட்டில் பி.மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி இடையே வைகைப் பெரியாறு பாசன கால்வாய் மற்றும் கடச்சனேந்தல் கண்மாய் செல்லும் கிளைக் கால்வாய்கள் அருகருகே செல்கின்றன. இந்த ரோட்டில் உள்ள பாசன கால்வாய்களில் குளிக்க, துவைக்க, குதுாகலிக்க என நகர்ப்புற இளைஞர்கள் வட்டாரமே உள்ளது.
இது விடுமுறை நாட்களில் அதிகமாகும். குடும்பத்தினர் தம்பதி, குழந்தைகள் சகிதமாக கார், டூவீலர்களில் வந்து ஆங்காங்கே நிறுத்தி படிக்கட்டுகள், கிடைக்கும் இடத்தில் துணிகளை கால்வாயில் துவைத்தும், கொண்டுவரும் உணவு பொருட்களை குழந்தைகளுடன் உண்டு குளித்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.
உயரமான பகுதியில் விழும் நீரில் அருவியில் குளிப்பதுபோல் மகிழ்கின்றனர். இளையோர் இறைச்சிகளை சமைத்தும், மது அருந்துவது என்று செயல்படுகின்றனர்.
இதனால் விவசாய பணிக்கு வாகனங்கள் கால்வாய் கரைகளில் செல்ல இடையூறு ஏற்படுகிறது.
மது போதையில் நண்பர்கள், மற்றவர்களுடன் தகராறு, வாகன விபத்து ஏற்படுகிறது. இப்பகுதி பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.