/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்
/
நாளை முதல் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஜன 02, 2026 06:09 AM
மதுரை: மதுரை தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் திராவிட பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் ஜன.,3 முதல் 9 வரை சட்டசபை தொகுதி வாரியாக நடத்தப்பட உள்ளது. ஆண்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கபடி, 200 மீ., ஓட்டம், பெண்களுக்கு கோ கோ, கபடி, 100 மீ., ஓட்டம் போட்டிகள் நடக்கின்றன.
கிழக்கு சட்டசபை தொகுதி சார்பில் உத்தங்குடி கலைஞர் திடலிலும், மேற்கு தொகுதிக்கு மதுரை கல்லுாரி வளாகத்திலும், மேலுார் தொகுதிக்கு மேலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், சோழவந்தான் தொகுதிக்கு அலங்காநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் போட்டிகள் நடக்கின்றன. இதில் ஒன்றியம், நகர், பகுதி, பேரூராட்சி சார்பில் அணிகளாக கலந்துகொள்ள வேண்டும். அதற்காக www.dravidapongal.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

