/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம்
/
சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பு கூட்டம்
ADDED : ஜன 02, 2026 06:09 AM
மதுரை: மதுரை மீனாம்பாள்புரத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறுவனர் அபுபக்கர் தலைமையில், சமூக செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறைத்தலைவர் நாகரத்தினம், மரங்கள் நடுவதுடன் அதனை பாதுகாப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து பேசினார். குப்பையை தரம் பிரித்து அகற்றுதல், தெருநாய்கள் பாதுகாப்பு, கட்டுப்பாடு, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வாதார வசதிகள், நதிநீர் இணைப்பு திட்டங்களின் அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை, விஷ்வநாத், சின்மயானந்தம், மகாமாயன், பாண்டீஸ்வரி, ஜெயக்குமார், முர்த்தி, கண்ணன், ராமானுஜம், புகழேஸ்வரன் பங்கேற்றனர்.

