நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேடு அருகே சல்லிகோடாங்கிபட்டியில் பூந்தமலை கொண்ட அய்யனார் கோயில் பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 2ம் நாள் விநாயகருக்கு பொங்கல் வைத்தனர். அய்யனார் சுவாமி உள்ளிட்ட கிராம தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. அன்றிரவு கிராமிய நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.