நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மின் வாரியத்தில்எலக்ட்ரிகல் மெக்கானிக்கல் சிவில் டிப்ளமா படிப்பு முடித்தவர்களில் 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சி பெறுவோருக்கு மாதம் 8000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
மத்திய தொழில் பழகுனர் வாரியம் வாயிலாக மின் வாரியம் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது.