/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 20, 2025 01:08 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண், பாடம் வாரியாக 'சென்டம்' பெற்ற மாணவர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா பரிசு வழங்கி பாராட்டினர்.
பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மலர்விழி (ஈ.வெ.ரா), சுவேதா ரத்னா (வெள்ளி வீதியார்), நிவாஷினி (ஈ.வெ.ரா.,), பிளஸ் 1ல் ரம்யா (காக்கைபாடினியார்), கோபிகா (ஈ.வெ.ரா.,), தேவஸ்ரீ (மாசாத்தியார்), பத்தாம் வகுப்பில் யோகவி (கஸ்துாரிபாய்), கமலேஷ் (இளங்கோ), சாதனா (வெள்ளி வீதியார்) ஆகியோர் பாராட்டப்பட்டனர். பாடம் வாரியாக 'சென்டம்' மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
துணைமேயர் நாகராஜன், கல்விக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன், கவுன்சிலர் நுார்ஜஹான், தலைமையாசிரியர்கள் அய்யர், முனியம்மாள், புஷ்பலீலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.