/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து உத்தரவு 'அடம் பிடிக்கும்' தொடக்க கல்வி அலுவலர்கள் ஒரே வகை உத்தரவு: இருவேறு நடவடிக்கையால் குழப்பம்
/
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து உத்தரவு 'அடம் பிடிக்கும்' தொடக்க கல்வி அலுவலர்கள் ஒரே வகை உத்தரவு: இருவேறு நடவடிக்கையால் குழப்பம்
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து உத்தரவு 'அடம் பிடிக்கும்' தொடக்க கல்வி அலுவலர்கள் ஒரே வகை உத்தரவு: இருவேறு நடவடிக்கையால் குழப்பம்
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து உத்தரவு 'அடம் பிடிக்கும்' தொடக்க கல்வி அலுவலர்கள் ஒரே வகை உத்தரவு: இருவேறு நடவடிக்கையால் குழப்பம்
ADDED : மே 15, 2025 02:46 AM
மதுரை:ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்த பின் அவர்களுக்கான பதவி உயர்வு பணப் பலன்கள் வழங்கப்பட்டன. ஆனால் அரசாணை எரிப்பு போராட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டும் அவ்வகை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. ஒரே உத்தரவை இருவேறு வகையில் பின்பற்றும் அதிகாரிகளால் 15000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதித்துள்ளனர்.
தமிழகத்தில் 2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான '17 பி' நடவடிக்கையை தமிழக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதன் மூலம் 5 ஆண்டுகளாக பதவி உயர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும், அவர்களுக்கு பதவி உயர்வுக்கு தகுதியான நாளில் இருந்து பதவி உயர்வுப் பணப் பலன்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக பாதிக்கப்பட்ட உயர், மேல்நிலையில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில் 2018 ல், 'இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க மறுக்கும்' வகையில் வெளியான இரண்டு அரசாணைகளை எரிக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் மாவட்டம் வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்கள் மீது '17 பி' நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகளால் இந்த நடவடிக்கைகளை 2021ல் அரசு வாபஸ் பெற்றது.
இதையடுத்து தொடக்க கல்வி இயக்குநர் சார்பில் புதிய உத்தரவு வெளியிடப்பட்டது. அதில் 'பதவி உயர்வு பணப்பலன் பாதிப்பு உள்ளிட்ட சம்பள இழப்புக்களை சரிசெய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டும் இதுவரை அரசு தொடக்க பள்ளி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: இரண்டு போராட்டங்களிலும் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒரே வகையான, அதாவது '17 பி' நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சீனியர்களுக்கு முன்னரே ஜூனியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.
நடவடிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பணப் பலன்கள் கிடைத்துள்ளன. ஆனால் அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பணப் பலன் வழங்காமல் தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி அலுவலர்கள் இழுத்தடிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.