/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைதிகள் தயாரிப்பு பொருட்கள்உயர்நீதிமன்றத்தில் விற்பனை
/
கைதிகள் தயாரிப்பு பொருட்கள்உயர்நீதிமன்றத்தில் விற்பனை
கைதிகள் தயாரிப்பு பொருட்கள்உயர்நீதிமன்றத்தில் விற்பனை
கைதிகள் தயாரிப்பு பொருட்கள்உயர்நீதிமன்றத்தில் விற்பனை
ADDED : ஆக 14, 2025 03:06 AM
மதுரை: மதுரை மத்திய சிறை கைதிகளின் மறுவாழ்வு நடவடிக்கையாக, அவர்கள் பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் தயாரிக்கும் ஆடைகள், பர்னிச்சர்கள், சமையல் எண்ணெய், இனிப்பு, பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் சிறப்பு விற்பனை முகாம் துவக்க விழா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் நடந்தது.
நிர்வாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.சவுந்தர், எல்.விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன், சிறை டி.ஐ.ஜி.,முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
உயர்நீதிமன்றக் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணிவரை, மாட்டுத்தாவணியிலுள்ள உயர்நீதிமன்றக் கிளை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் சனிக்கிழமை தோறும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணிவரை விற்பனை நடைபெறும்.