/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டில்லியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழக விவசாயிகளை கைது செய்வதா மதுரையில் ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 22, 2025 04:28 AM

மதுரை: அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஒருங்கிணைப்பு தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கைது செய்த மத்திய அரசை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை, பிற மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் ராமன், குணசேகரன், முத்துமீரான், மணிகண்டன், செல்லப்பாண்டி, அருண், அழகுசேர்வை, கூறியதாவது:
டில்லியில் மார்ச் 19 மதியம் 2:00 மணிக்கு அகில இந்திய ஐக்கிய விவசாய சங்கத் தலைவர்களுடன் நான்காம் கட்டமாக பிரதமர் மோடி தலைமையில் 5 மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட குழுவுடன் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஐந்தாவது கூட்டம் ஏப். 4ல் நடப்பதாக கூறினர்.
அங்கிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைந்த அனைத்து தலைவர்களையும் மத்திய அரசு கைது செய்தது.
அகில இந்திய ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் தலைவர் டிலேவாள் 120 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரையும் தமிழக தலைவர்களையும் சேர்த்து எத்தனை பேரை கைது செய்தனர், எங்கு கொண்டு சென்றனர் என தெரியவில்லை. எமர்ஜென்சியை விட கொடூரமான நிலையை மத்திய அரசு கையாண்டுள்ளது.
விவசாயத்திற்கு எதிரான போக்கை கையாளும் மத்திய அரசை எதிர்த்து அனைத்திந்திய விவசாயிகள் 400 நாட்களாக போராடி வரும் நிலையில் 25 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகினர்.
தமிழக விவசாயத் தலைவர்களை மீட்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை கொண்டு வரும் வரை மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.