தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் மறியல் விவசாயிகள் கைது

மதுரையில் மறியல் விவசாயிகள் கைது

மதுரையில் மறியல் விவசாயிகள் கைது


UPDATED : அக் 21, 2026 06:10 PM

ADDED : அக் 21, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 06:10 PM ADDED : அக் 21, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பயிர்க்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் வாக்குறுதிப்படி த.வெ.க., அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தை வறட்சி பாதித்ததாக அறிவித்து நிவாரண பணிகளை துவக்க வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரி விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட தலைவர் இளங்கோவன் கூறியதாவது: பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

* மேலுார் செக்கடியில் விவசாய அணி தாலுகா செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனிச்சாமி, கண்ணன், ராஜேஸ்வரன் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சிவக்குமார் கைது செய்தார்.

* சோழவந்தானில் மாவட்டத் தலைவர் வேல்பாண்டி தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளிதாஸ், மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் முருகன், செயலாளர் முத்துராணி பங்கேற்றனர். போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us