ADDED : பிப் 13, 2025 05:33 AM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, டில்லியில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விஜயராகவன் - ராமலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார்சாமி, உப தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வரவேற்றார்.
உதவி பேராசிரியர் திருஞானசம்பந்தம் அறிமுக உரையாற்றினார். 'வழிகாட்டும் மன்னர் திருமலை' என்ற தலைப்பில் எழுத்தாளர் கவுதமன் பேசினார். பேராசிரியர் மல்லிகா தொகுத்து வழங்கினார். உதவி பேராசிரியர் தேவி பூமா ஒருங்கிணைத்தார்.
கல்லுாரி மாணவர்களில் ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் 52 பேருக்கு ரூ.8.12 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தமிழ் உயராய்வு மைய துறை தலைவர் காயத்ரிதேவி நன்றி கூறினார்.