/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்
/
ரோடு வசதி வேண்டும் ராயபுரம் பொதுமக்கள்
ADDED : ஜூன் 15, 2025 06:55 AM

சோழவந்தான் : சோழவந்தான் அருகே ராயபுரத்தின் கிழக்கே ஜெர்மென் பிளாட் பகுதியில் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
அப்பகுதி மைக்கேல் கூறியதாவது: இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக இப்பகுதியில் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. மழைக்காலங்களில் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.ஊருக்குள் அமைத்துள்ள சிமென்ட் ரோடு சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. சீரமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் பலன் இல்லைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பி.டி.ஓ., கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, 'இப்பகுதியில் ரோடு அமைக்கும் திட்டம் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.