ADDED : பிப் 16, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்துாரில் பாண்டியர்கள் கால சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள சுவாமி ஆயுதங்கள் ஏந்தி, காலில் தண்டை அணிந்து போருக்கு புறப்படுவது போல காட்சியளிக்கிறார்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாலாலய வழிபாட்டில் துறையின் ஆய்வாளர் சோமசுந்தரம், சிறப்பு அலுவலர் நதியா, அறங்காவலர் சரவணன், பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி, திம்மநத்தம் ஊராட்சி தலைவர் தோப்புச்சாமி, உசிலம்பட்டி பா.ஜ., நகர் தலைவர் பிரசாத்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அர்ச்சகர்கள் சுந்தரராஜன், ராம்குமார் குழுவினர் பூஜை செய்தனர்.