/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் குவாரிகள் மூடல் செங்கல் தொழிலாளர் வேலையிழப்பு
/
பேரையூரில் குவாரிகள் மூடல் செங்கல் தொழிலாளர் வேலையிழப்பு
பேரையூரில் குவாரிகள் மூடல் செங்கல் தொழிலாளர் வேலையிழப்பு
பேரையூரில் குவாரிகள் மூடல் செங்கல் தொழிலாளர் வேலையிழப்பு
ADDED : செப் 15, 2025 04:31 AM

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் செங்கல் காளவாசல்களுக்காக குவாரி அமைக்கப்பட்டு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. செங்கல் தயாரிப்புக்கு பயன்படும் மண் விவசாய தோட்டங்களில் இருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.
ஒரு லோடு (3 யூனிட்) மண் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. குவாரிகளுக்கான விற்பனை காலக்கெடு முடிந்தது. தற்போது மண் கிடைக்காமல் செங்கல் தொழில் முடங்கியுள்ளது.
செங்கல் தயாரிப்பில் மண் களத்தில் கொட்டி நன்கு குழைக்கப்படுகிறது. அதன்பின் செங்கலாக வார்த்து எடுத்து, காய வைக்கின்றனர்.
அதை எடுத்து சூளைகளில் அடுக்கி, தீயில் வேகவைக்கின்றனர். ஒரு மாதத்தில் 80 ஆயிரம் செங்கல் தயார் செய்ய முடியும். மண் கிடைக்காததால் தற்போது செங்கல் தயாரிப்பு தொழில் அடியோடு முடங்கியுள்ளது.
இதனால் செங்கல் சூளையை நம்பி பிழைப்பு நடத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் செங்கல் விலை உயரும் விலை உருவாகி உள்ளது. இது கட்டுமான தொழில் ஈடுபடுவோரை கலக்கம் அடையச் செய்துள்ளது.
செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது: இப்பகுதியில் செங்கல் அறுப்பு, சூளையில் அடுக்குதல் போன்ற பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் செங்கல் தயாரித்தால் ரூ.ஆயிரம் கூலி வழங்கப்படுகிறது. மண் கிடைக்காததால் தொழிலை நடத்த இயலவில்லை. அதனால் பலரும் வேலையிழந்துள்ளனர். மீண்டும் தொழில் தொடங்கும் வரை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.