/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ரயில்வே தேர்வாணையம் விளக்கம்
/
வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ரயில்வே தேர்வாணையம் விளக்கம்
வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ரயில்வே தேர்வாணையம் விளக்கம்
வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ரயில்வே தேர்வாணையம் விளக்கம்
ADDED : மார் 17, 2025 06:56 AM
மதுரை: ரயில்வேயில் உதவி லோகோ பைலட்களுக்கான தேர்வுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஏற்படுத்தப்பட்டது குறித்து ரயில்வே தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் உதவி லோகோ பைலட் பதவிக்கான 2ம் நிலைத் தேர்வு மார்ச் 19, 20ல் நாடு முழுதும் நடக்கவுள்ளது. தமிழக தேர்வர்களில் 80 சதவீதம் பேருக்கு வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த தேர்வர்கள், தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து ரயில்வே தேர்வாணையம் அளித்த விளக்கம்: உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிந்தளவு சொந்த மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான முதற்கட்ட தேர்வு பல 'ஷிப்ட்'களில் நடந்தன. இதனால் வெவ்வேறு இடங்களில் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 2ம் கட்ட தேர்வு ஒரே ஷிப்டில் நடக்கவுள்ளது. இதனால் சொந்த மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் தவிர்க்க முடியாத நிலையில் பக்கத்து மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் மார்ச் 17, 18ல் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) பணிகளுக்கான தேர்வுகள் முடிந்தவுடன் மார்ச் 19, 20ல் இரண்டாம் கட்ட உதவி லோகோ பைலட் பணிக்கு தேர்வுகள் நடக்க உள்ளன. இந்த 2 பதவிகளுக்கும் விண்ணப்பித்தோருக்கு சொந்த மாநிலத்தில் ஒரே தேர்வு மையங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை ரயில்வே தேர்வாணையத்தில் இரு பதவிகளுக்கும் விண்ணப்பித்த 15 ஆயிரம் பேருக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒதுக்கீடு நாட்டின் 21 ரயில்வே தேர்வாணையங்களிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த 2ம் கட்ட தேர்வுக்கும் இதே ஒதுக்கீடு முறையே கடைபிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்க பட்டியலின மாணவர்களுக்கு இலவச பயண பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.