ADDED : அக் 03, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6:10 மணிக்கு அரசு டவுன்பஸ் சேக்கிபட்டிக்கு சென்றது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. பஸ்சின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பஸ்சிற்குள் ஒழுகத் துவங்கியது. பயணிகள் இருக்கையில் அமர முடியாமல் தவித்தனர். மழைநீர் படாதவாறு ஒதுங்க முடியாத சூழல் பஸ்சிற்குள் நிலவியது.
மழையில் நனைந்தவாறு நின்றபடியே பயணம் செய்தனர். வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் பழுதான பஸ்களை சரி செய்வதுடன், ஒழுகும் பஸ்களை ஒழுங்குபடுத்தி சீரமைத்து பயணிகளின் நிம்மதி பயணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

