/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடி மின்னலுடன் மதுரையை மிரட்டிய மழை
/
இடி மின்னலுடன் மதுரையை மிரட்டிய மழை
ADDED : அக் 25, 2024 05:34 AM

மதுரை : மதுரையில் நேற்று இரவு 8:30 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியவுடன் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரையில் பலத்த இடியுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. பெரியார் பஸ் ஸ்டாண்ட், காளவாசல், பழங்காநத்தம், பசுமலை, தெற்கு வாசல், மகால், கீழவாசல், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையத்தில் கனமழை பெய்தது.
ரோடுகளில் மழைநீர் குளமாக தேங்கியது. இடி மின்னல் அதிகம் இருந்ததால் மழை துவங்கியவுடன் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் தீபாவளி வியாபாரம் களை கட்டிய நிலையில் கனமழையாலும் மின்தடையாலும் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான இடங்களில் மின்தடை நிலவியதால் ரோட்டின் மேடு பள்ளங்களில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி வாகன ஓட்டிகள் தடுமாறி சென்றனர்.

