ADDED : அக் 23, 2026 08:47 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அக்.21ம் தேதி 67 மி.மீ., மழைப்பொழிவு கிடைத்தது. அடுத்தடுத்து சாரல் மழை பெய்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், சந்தை திடலுக்குள் நுாலகம் முன்பு என தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளமாக தேங்கியுள்ளது. தொடர் மழையால் செட்டியபட்டி, வெள்ளைமலைப்பட்டி பகுதிகளில் மலையடிவாரப் பகுதிகளில் இருந்து ஓடைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
