/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் துார்வாராத கண்மாய்கள் வீணாகிறது மழை நீர்
/
பேரையூரில் துார்வாராத கண்மாய்கள் வீணாகிறது மழை நீர்
பேரையூரில் துார்வாராத கண்மாய்கள் வீணாகிறது மழை நீர்
பேரையூரில் துார்வாராத கண்மாய்கள் வீணாகிறது மழை நீர்
ADDED : ஏப் 11, 2025 05:38 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் சாகுபடி பெருக இப்பகுதி கண்மாய், வரத்து கால்வாய்களை கோடை மழை பெய்யும் நேரத்திலாவது துார்வார வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பேரையூர் தாலுகாவில் 73 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி முழுவதும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இருப்பினும் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே சாகுபடி நடக்கும். இங்குள்ள எந்தக் கண்மாயிலும் நீண்ட காலமாக துார்வாரவில்லை.
எனவே மண்மேவி, ஒரு சிறிய மழை பெய்தாலும் ஆழமில்லாத கண்மாய் உடனே நிரம்பி விடும். சில கண்மாய்களோ தொடர் மழை பெய்தாலும் நிரம்புவதில்லை.
காரணம் கண்மாய் முழுவதும் முட்புதர்களாக இருப்பதால் மழை நீரை உறிஞ்சி விடுகிறது. கண்மாய்களுக்கு முறையான வரத்து கால்வாய் வசதியும் இல்லை. இருக்கும் கால்வாய்களும் துார்வாரப்படாததால் மழை நீர் கண்மாயில் சேர வழியில்லை.
விவசாயிகள் மழை பெய்யும்போது பயிரிடுகின்றனர். அதேசமயம் மழையால் கண்மாய் நிரம்பினால் தான் சாகுபடி முழுமையடையும். ஆனால் பெய்யும் மழை நீர் கண்மாயில் சேராததால் சாகுபடி பணிகள் கேள்விக்குறியாகிறது.
இப்பகுதியில் சமீபகாலமாக கோடையிலும் கனமழை பெய்கிறது. இருப்பினும் நீர் நிலைகள்முறையான பராமரிப்பு இன்றி போனதால் மழைநீரை சேமிக்க முடியவில்லை. கண்மாய் கறைகளை பலப்படுத்துதல், ஷட்டர்களை பழுது நீக்குதல், துார்வாருதல், ஓடைகளை சரி செய்தல் என எதையும் தரமாக செய்யவில்லை.
இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் விரைந்து வெளியேறி விடுகிறது. விவசாயிகள் சாகுபடி பணிகளை வெகுவாக குறைத்துக் கொண்டனர். அவ்வப்போது பெய்யும் கோடை மழையால் கிடைக்கும் நீரை சேமிக்க, கண்மாய்களை துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.