ADDED : ஏப் 07, 2025 05:00 AM

திருப்பரங்குன்றம் ' திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மார்ச் 31ல் துவங்கிய ராம நவமி விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று காலை சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராம நாம ஜெபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படியானது. உற்ஸவர்கள் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கூடல்மலைத் தெரு சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வடைமாலை சாத்துப்படியாக தீபாராதனை நடந்தது. விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் காலை மூலவர்களுக்கு திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை முடிந்து மாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது.
பேரையூர்:நல்லமரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ராம நவமி விழா நடந்தது. சிறப்பு பூஜைகள், கும்பு பூஜை, சிறப்பு யாகம், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், கோமாதா பூஜை, அர்ச்சனைகள் நடந்தன. பொதுமக்களின் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பஞ்சம் தீரவும், சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.