ADDED : அக் 25, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: வலைச்சேரி பட்டியில் 22 வருடங்களாக செயல்படும் ரேஷன் கடையில் 400-க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். இக்கடையின் மேல் பகுதியில் தட்டோடு பதிக்காததால் மழை தண்ணீர் தேங்கி, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வெடிப்பு ஏற்பட்டு கடையினுள் தண்ணீர் வடிந்தது.
இதில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணானது.
சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கார்டுதாரர்கள் மீது விழுவதால், அவர்கள் உயிரை பணயம் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்கும் அவலம் நிலவுகிறது.
அதனால் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்து உயிர்ப்பலி ஏற்படும் முன் கடையை மராமத்து பார்க்க வேண்டும்.
அதுவரை கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே கார்டுதாரர்களின் எதிர்பார்ப்பு.

