ADDED : நவ 22, 2024 04:49 AM
மதுரை: மேலுார் கல்வி மாவட்டம் இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில் அமைப்பாளர்களுக்கான (பள்ளி ஆசிரியர்கள்) ஒருநாள் பயிற்சி முகாம் மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் சுதாகர், சிவக்குமார் செஞ்சிலுவை சங்க கொடியேற்றினர். மேலுார் அமைப்பாளர் ஜான்சன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜ்குமார், ரவிச்சந்திரன் பேசினர். மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி குருசாமி தனியாமங்கலம், கொடுக்கம்பட்டி அருசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். மேலுார் கல்வி மாவட்ட இளஞ்செஞ்சிலுவை சங்க இணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், பாலகிருஷ்ணன், மீர்நாமத்துல்லா இப்ராஹிம், உறுப்பினர்கள் மாயாண்டி, துரைஅருள், ராஜ்குமார், அருள்சாமி பங்கேற்றனர்.