/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாரத்தான் போட்டி இன்று முதல் பதிவு
/
மாரத்தான் போட்டி இன்று முதல் பதிவு
ADDED : டிச 29, 2024 04:44 AM
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து ஜன. 5 காலை 6:30 மணிக்கு அண்ணா மாரத்தான் போட்டி நடக்கிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறியதாவது: 17 முதல் 25 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ., துாரம், மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரம், 25 வயதிற்கு மேற்பட்ட மணவர்களுக்கு 10 கி.மீ., துாரம் மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரம் மாரத்தான் ஓட்டம் ரேஸ்கோர்ஸ் மைதான வாசலில் இருந்து துவங்குகிறது. மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம், தாமரைத்தொட்டி, புதுார் பஸ் ஸ்டாண்ட், மூன்றுமாவடி, சூர்யாநகர், கடச்சனேந்தல் வரை ஓட்டம் நடைபெறும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தலைமையாசிரியர் அல்லது முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் ஆதார் கார்டு, பள்ளி, கல்லுாரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.
முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000, 4 முதல் பத்தாவது இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்படும். இன்று (டிச.28) முதல் ஜன. 4 மாலை 6:00 மணிக்குள் நேரில் வந்து பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றார்.