/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றத்தில் சோதனை மேல் சோதனை...:ரெகுலர் ஏ.இ.,க்களின் புலம்பல் தொடருது
/
மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றத்தில் சோதனை மேல் சோதனை...:ரெகுலர் ஏ.இ.,க்களின் புலம்பல் தொடருது
மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றத்தில் சோதனை மேல் சோதனை...:ரெகுலர் ஏ.இ.,க்களின் புலம்பல் தொடருது
மாநகராட்சி பொறியாளர்கள் இடமாற்றத்தில் சோதனை மேல் சோதனை...:ரெகுலர் ஏ.இ.,க்களின் புலம்பல் தொடருது
ADDED : அக் 24, 2025 02:36 AM

மதுரை: மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் 16 பேர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பி.இ., தகுதியுள்ள ரெகுலர் உதவி பொறியாளர்கள் பலருக்கு ஒரு வார்டு ஒதுக்கியும், பாலிடெக்னிக் தகுதியுள்ள தேர்ச்சி திறன் 2 அலுவலர்களுக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கியும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. பாதாளச் சாக்கடை பிரச்னை, ரோடு சீரமைப்பு, குடிநீர் வினியோகம் என மக்களை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பணிகளை மாநகராட்சி சமாளித்து வருகிறது. தற்போது மேயர், 5 மண்டலத் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. இருக்கும் அதிகாரிகளை வைத்து கமிஷனர் சித்ரா வார்டு பிரச்னைகளை சமாளிக்கிறார்.
இந்நிலையில் 16 பொறியாளர்கள் பணியிடம் மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரெகுலர் உதவி, இளநிலை பொறியாளர்கள் பலருக்கு ஒரு வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்ச்சி திறன் நிலை 2 அலுவலர்களுக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கி பொறியாளர்களுக்கு இடையே மனக்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் மாநகராட்சி அலுவலகத்தில் சிலர் 'அரசியல்' செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொறியாளர்கள் சிலர் கூறியதாவது:
ஒவ்வொரு முறையும் பொறியாளர்கள் பணியிட மாற்றத்தில் சிலர் மறைமுக அரசியல் செய்கின்றனர். இது அதிகாரிகளுக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. அரசியல் செய்பவர்களை 'அட்ஜெஸ்ட்' செய்யும் பொறியாளர் சிலருக்கு 2 வார்டுகள் 'சலுகை' காண்பிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி திறன் 2 நிலையில் உள்ள பலருக்கும் இரண்டு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பாரபட்சம் குறித்து கமிஷனர் விசாரித்தால் உண்மை தெரியும். இது முதற்கட்ட பணியிட மாற்றம் தான். அடுத்தடுத்த மாறுதல் உத்தரவிலாவது இதுபோன்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றனர்.

