ADDED : டிச 18, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தேனி வீரபாண்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் 56. தேனியில் நடந்த விபத்தில் காயமடைந்து டிச. 14ல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிச. 15ல் மூளை சாவு அடைந்தார். டிச. 16ல் சிறுநீரகங்கள் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் விமானம் மூலம் சென்னை ரேலா மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இதன் மூலம் நால்வர் மறுவாழ்வு பெற்றனர்.